Tuesday, July 2, 2024

தி கோட் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா பறந்த விஜய்! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தி கோட் படப்பிடிப்பு…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தில் விஜய்யின் மீதி இருக்கும் காட்சிகளை வரும் 15ஆம் தேதிக்குள் முடிக்க இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.

தற்போது கோட் படத்தின் படப்பிடிப்பிற்க்காக விஜய் அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அமெரிக்கா புறப்பட சென்னை விமான நிலையத்திற்குள் நடந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

இந்தப் படத்தில் விஜய் மட்டுமின்றி பிரபுதேவா, பிரசாந்த் போன்ற முக்கிய ஹீரோக்களை வெங்கட் பிரபு எவ்வாறான கதாபாத்திரங்கள் கொடுத்து எப்படி பயன்படுத்திருப்பர் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மறுபுறம், நடிகர் மோகன் 90 களில் மிகப்பெரிய வெற்றிகரமான ஹீரோவாக இருந்தவர், அவர் கோட் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்படும் நிலையில் சிவகார்த்திகேயனின் காட்சிகள் சென்னையில் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் டப்பிங் பணிகள் 50% முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News