எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது 30வது படமாக ‘பிரதர்’ எனும் படத்தில் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, பிரியங்கா மோகன், விடிவி.கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அக்கா, தம்பி சென்டிமென்ட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000049604-655x1024.jpg)
தீபாவளிக்கு படம் வெளியாகலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் இன்று(ஆக., 3) இந்த படத்தை வருகின்ற தீபாவளிக்கு வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000040851-1-683x1024.jpg)
இதே போல் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகிறது.இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள நிலையில் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.