Tuesday, November 5, 2024

ஆகஸ்ட் மாதத்தில் மிரட்ட வருகிறதா டிமான்ட்டி காலனி 2 திரைப்படம்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிமான்ட்டி காலனி’ முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது..

இந்த படத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், டிமான்ட்டி காலனி 2 படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.இந்நிலையில், ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News