Saturday, September 14, 2024

கையில் கிட்டார், கவர்ச்சி உடையில் ராக்ஸ்டாராக மாறிய நடிகை அனுக்ரீத்தி வாஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திருச்சியை சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ், சென்னை லயோலா கல்லூரியில் பட்டம் பெற்றவர். ஃபேஷன் துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்த காரணமாக, பல அழகிப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக, மிஸ் ஃபெமினா தமிழ்நாடு மற்றும் மிஸ் ஃபெமினா இந்தியா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர் ஆவார்.

அனுக்ரீத்தி வாஸ், 2022ம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த “டிஎஸ்பி” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். விஜய் சேதுபதி, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்த அந்த படம் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு, 2023ம் ஆண்டு தெலுங்கு படமான “டைகர் நாகேஸ்வர ராவ்” மூலம் டோலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இந்நாண்டு, இந்தியில் வெளியாகவுள்ள “விஸ்ஃபாட்” எனும் படத்தில் இடம்பெற்ற பாடலில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். தமிழ் படமான “வெற்றி” எனும் படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“விஸ்ஃபாட்” படத்தில் இடம்பெற்ற “காம்லி நாம் பியா டா” பாடலுக்காக கவர்ச்சியான உடையில், கையில் கிட்டார் ஒன்றையும் கொண்டு, அனுக்ரீத்தி வாஸ் குத்தாட்டம் ஆடியுள்ளார். இந்த பாடல் ஷூட்டிங்கின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், யூடியூபில் பாடலை காண்பதற்காக அவர் ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அனுக்ரீத்தி வாஸின் இந்த வடிவத்தை பார்த்த ரசிகர்கள் “நீங்கள் பெரிய ராக்ஸ்டார்” என கூறி, அவரை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News