அண்ணன் – தம்பி பாசம், குடும்ப உறவுகள் குறித்த படம் என்றாலே இயக்குநர் ராசு மதுரவனின் ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘முத்துக்கு முத்தாக’ படங்கள் நினைவுக்கு வந்து கலங்கடித்து இதயத்தைக் கனக்க வைத்துவிடும். இப்படி, பாராட்டுகளையும் வரவேற்பையும் குவித்த இயக்குநர் ராசு மதுரவன், உடல்நல குறைவால் இறந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜூலை 9 அவரின் நினைவுநாளையொட்டி, அவரது மனைவி பவானி அவர்களது குடும்பச்சூழலை பகிர்ந்த தகவல்கள் கதிகலங்கவைத்தது.
இந்த நிலையில், பிரபல பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியை படித்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் இரண்டு மகள்களுக்கும் இந்த வருடத்திற்கான கல்விக் கட்டணம் சுமார் 1 லட்சம் ரூபாய்யைச் செலுத்தி உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். இதுகுறித்து நம்மிடம் பேசிய ராசு மதுரவனின் மனைவி பவானி, “இத்தனை நாட்கள் நாங்க எங்க இருந்தோம், என்ன பண்ணினோம் நு யாருமே கண்டுக்கல. என் கணவர் படத்தில் அத்தனை நடிகர்கள், அத்தனை இயக்குநர்கள் நடிச்சிருக்காங்க. இதுவரைக்கும் எங்கக்கிட்ட யாரும் பேசினது கிடையாது. ஆனா, எங்களை தேடி பிடிச்சு நாங்க எப்படி இருக்கோம்?னு கேட்டது நீங்கள் தான் என பிரபல பத்திரிக்கையை குறிப்பிட்டுள்ளார். எங்களோட நிலமையைக் கேட்டதுக்காகவே விகடனுக்கு பெரிய நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். என் மூத்த பொண்ணு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறா, ரெண்டாவது பொண்ணு பத்தாவது படிக்கிறா.
பிரபல பத்திரிக்கையில் வந்த செய்தியை படிச்சுட்டு சிவகார்த்திகேயன் சார், என்னோட ரெண்டு பிள்ளைகளுக்குமான இந்த வருட ஸ்கூல் ஃபீஸ் 97,000 ரூபாயைக் கட்டினார். அவருக்கும் என் கணவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என் கணவரோட இயக்கத்துல கூட அவர் நடிச்சதுமில்ல. ஆனா, பிரபல பத்திரிக்கையில் வெளியான கட்டுரையை படிச்சுட்டு எங்களோட நிலைமையையும் கஷ்டத்தையும் புரிஞ்சுக்கிட்டு இப்படியொரு உதவியைச் செஞ்சது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. என்னை தொடர்புகொண்ட சிவகார்த்திகேயன் சாரோட நற்பணி மன்றத் தலைவர் மோகன்தாஸ் சார், ‘சிவகார்த்திகேயன் சார் இன்னும் ரெண்டு நாளில் பேசுவார்ன்னும் சொன்னாதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.