தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது தேவாரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, என்டிஆர் நடிக்கும் புதுப்படத்தை கேஜி.எப் பட இயக்குனர் கே.பிரசாந்த் நீல் இயக்குகிறார். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது.
இது ஜூனியர் என்டிஆரின் 31 வது படமாகும். தற்போது “NTR-நீல் என்ற தலைப்பில் இப்படம் அழைக்கப்படுகிறது.இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் மெக்சிகோவில் நடைபெறவுள்ளது. மேலும் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.