வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்துள்ள ‘GOAT’ திரைப்படத்தில் பல வினோதமான விஷயங்களும் சஸ்பென்ஸ் முறையிலும் இடம்பெற்றுள்ளன. வெங்கட் பிரபு மற்றும் படக்குழு வழங்கும் பேட்டிகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றன.
“கிரிக்கெட் வீரர் தோனி இப்படத்தில் நடிக்கிறாரா? இல்லையா?”, “அஜித்தின் ரெபரென்ஸ் இப்படத்தில் இருக்கிறதா? த்ரிஷா இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறாரா? சிவகார்த்திகேயன் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறாரா?” என்று ரசிகர்கள் பல கேள்விகள் எழுப்புகின்றனர்.
ஆனால், இந்த கேள்விகளுக்கு படக்குழு பதிலளிக்கவில்லை. அனைத்தும் சஸ்பென்ஸ், படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என்று மட்டுமே கூறுகின்றனர். இதுவே ரசிகர்களின் ஆர்வத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.