இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள புதிய திரைப்படம் “அமரன்” மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், சிவகார்த்திகேயனின் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.


சிவகார்த்திகேயன் “முகுந்தன்” என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்ட நடிகர்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் வரும் மாதம் 31ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்கு முன்னதாக, “அமரன்” படத்தின் முதல் பாடல் “ஹே மின்னலே” ஏற்கனவே வெளியானது மற்றும் அது பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது, இப்படத்தின் இரண்டாவது பாடல் “வெண்ணிலவு சாரல்” வெளியாகியுள்ளது. யுகபாரதி எழுதிய இந்த பாடலை கபில் கபிலன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் இணைந்து பாடியுள்ளனர்.