ஜெயம் ரவி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர்.ஜெயம் ரவி 2019ல் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற கோமாளி படத்திற்குப் பிறகு, ஜெயம் ரவிக்கு பெரிய அளவில் ஓடிய படங்கள் என வேற ஏதும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. பொன்னியின் செல்வன் படம் என்னதான் வரவேற்ப்பை பெற்றாலும்,அதில் அவரின் பங்கு குறைவாகவே இருந்தது.சமீபத்தில் அவர் பிரதர் மற்றும் சீனி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்களையும் அவர் வெற்றி தரும் என மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்நோக்கி உள்ளார். குறிப்பாக சீனி படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படுகிறது. ஜெயம் ரவியின் படங்களில் இதுவே மிகுந்த பட்ஜெட்டில் தயாராகும் படம். இதற்கான 100 கோடிக்கு மேல் பட்ஜெட் என்கிறார்கள்.
இப்படி ஜெயம் ரவி கையில் என்னதான் படங்கள் இருந்தாலும் தனிஒருவனை தவிர இதுவரை ஒரு பிளாக்பஸ்டர் படம் இன்னும் இல்லை,இந்நிலையில் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கிய படம் தான் தனி ஒருவன், அதன் இரண்டாம் பாகத்தை இப்போது எடுக்கவிருக்கிறார்கள்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் கல்பாத்தி, ஜெயம் ரவியையும் மோகன் ராஜாவையும் அழைத்து, இந்த வருட இறுதிக்குள் தனி ஒருவன் 2 படத்தை வெளியிட வேண்டும் என்று கர்ரராக சொல்லியிருக்கிறார் என செய்திகள் வெளிவந்துள்ளன.