Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

செப்டம்பரில் வெளியாகிறதா சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம்? வெளியான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கின்ற புதிய படம் “அமரன்.” இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது, இதனை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு விருந்து வைத்தார்.

“அமரன்” படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் தொடர்பான ஒவ்வொரு தகவலும் பிரமிக்க வைக்கும் வகையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “அமரன்” திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயன் “முகந்தன்” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் பெரும்பாலான படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றது என்பது கவனிக்கத்தக்கது.

அதேபோல் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய்யின் தி கோட் திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News