சசிக்குமார் கோலிவுட்டின் முக்கியமான இயக்குநரும் நடிகரும் ஆவார். அவர் இரண்டு படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், அவை இன்னமும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
அந்த படங்களில் சுப்ரமணியபுரம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், அந்த இரண்டு படங்களுக்குப் பிறகு சசிக்குமார் இயக்குவதில் கவனம் செலுத்தவில்லை. பதிலாக, அவர் தனது நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்துள்ள கருடன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில் சூரி மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், “கருடன்” படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சசிக்குமார் பேசும்போது, “எல்லோரும் தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும் ஆக முடியாது. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்தல் சாத்தியமற்றது. ஒருமுறை நான் விமானத்தில் சென்றபோது சிவக்குமார் என்னுடன் பயணித்தார். அப்போது அவர் என்னிடம், ‘நீ நடிகன். படம் தயாரிக்காதே’ என்று கூறினார். இதையே நான் என் பிள்ளைகளுக்கும் சொல்லி வருகிறேன்.
நீ படம் தயாரித்தாலும், இவர்களுக்கு எவ்வளவு பணம் தர வேண்டும் அவர்களுக்கு எவ்வளவு பணம் தர வேண்டும் என்ற எண்ணம் உனக்குள் இருக்கும். அது கேமரா முன் வெளிப்பட்டுவிட்டால் நடிக்க முடியாது. இதையே ரஜினிகாந்த்தும் என்னிடம் கூறியுள்ளார் ‘நடிப்பில் கவனம் செலுத்து, படம் தயாரிக்காதே’ என்று அவர் அறிவுரை என்றார்.இரண்டையும் சேர்த்து செய்வது மிகக் கடினம்” என்று சசிக்குமார் பகிர்ந்துள்ளார்.