Touring Talkies
100% Cinema

Wednesday, November 12, 2025

Touring Talkies

இளையராஜா வைரமுத்து மோதல்! இரண்டு தகப்பன்களுக்கு இடையேயான பிரச்சினை என்கிறார் சீமான்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசைஞானி இளையராஜா மற்றும் வைரமுத்து இடையேயான பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில் பல பிரபலங்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு படத்தின் பிரத்தியேக காட்சியை பார்த்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சீமான்.

இயக்குனர் ஆதம் பாவா இயக்கத்தில் அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. அதேசமயம் ஜாபர் சாதிக் பிரச்சினையால் அவர் தயாரிப்பில் அமீர் நடித்துள்ள அவரின் மற்றொரு திரைப்படமான இறைவன் மிகப்பெரியவன் படம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இசை பெரிதா?‌ பாடல் வரிகள் பெரிதா என வைரமுத்து மற்றும் இளையராஜா இடையே நடைபெற்று வரும் மோதல் குறித்த கேள்விகளை செய்தியாளர்கள் சீமானிடம் கேட்டனர்.கல்வி வீரமா செல்வமா? என மறுபடியும் சரஸ்வதி சபதம் படம் தான் எடுக்க வேண்டும் என்றும் இயல், இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என அப்போதே பாடி விட்டனர். இசையும் மொழியும் சேர்ந்ததுதான் பாடல்.

நாம் அதை மறுக்க முடியாது. இது இரண்டு தகப்பன்களுக்கு இடையே இருக்குற பிரச்சனை. இதற்குள்ள எங்களை கோர்த்து விடாதீங்க, அவர்கள் பேசி தீர்த்துக் கொள்ளவது தான் நல்லது.இளையராஜா அப்பா கேட்கும் காப்புரிமை கோரிக்கை என்பது நியாயமான ஒன்று, அதை புரியாமல் பலரும் அவரை விமர்சிப்பது தவறான செயல் என சீமான் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News