ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 28 ஆண்டுகள் கழித்து, ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி போன்ற பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ‘இந்தியன் 2′ பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. படத்தின் முதல் பாடலாக `பாரா பாரா’ வெளியிடப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதற்குப் பிறகு, மே 29 அன்று அடுத்த பாடலை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்காக ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.அந்த போஸ்டரில் சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஒரு கஃபேவில் அமர்ந்தபடி காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் ரொமேண்டிக் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 அன்று மிகச் சிறப்பாக நடக்கவுள்ளது.இந்த படத்தின் முதல் பாகம் போலவே, இந்த பாகமும் பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.