Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

என்னை கணிக்க முடியாது… அதிரடி ஆக்‌ஷன் அனல் தெறிக்க வெளியான ‘கேம் சேன்ஜர் படத்தின் டீஸர்! #GameChanger

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘இந்தியன் 2′ படத்தின் தோல்விக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் ‛கேம் சேஞ்சர்’. இதில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டு, பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார், மேலும் ‘வாரிசு’ படத்தை தயாரித்த தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ளது. இதன் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

1:31 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டீசரில் ஷங்கரின் படங்களுக்கே உரிய பிரமாண்ட காட்சிகள், அதிரடி ஆக்ஷன் சீன்கள் நிறைந்துள்ளன. இதில் ராம் சரண் பல்வேறு விதமான தோற்றங்களில் அசத்துகிறார். படத்தின் கதையினை அரசியல்வாதிகளுக்கு எதிரானதாக காண முடிகிறது.

ராம் மாதிரி நல்லவனும் இல்லை, கோபம் வந்தா ராம் மாதிரி கெட்டவனும் இல்லை என்னை கணிக்கவே முடியாது என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் டீசர் வெளியாகியுள்ளது. சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி ‘கேம் சேன்ஜர்’ திரைப்படத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News