கே.ஜி.எஃப் திரைப்படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் யாஷ். அந்த படத்திற்கு பிறகு உலகம் முழுவதும் ரசிகர்களின் மிகப்பெரிய பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார்.கே.ஜி.எஃப் சாப்டர் 2 திரைப்படத்தைத் தொடர்ந்து, அவர் தற்போது டாக்ஸிக் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இது டிரக் மாஃபியா உலகத்தை மையமாகக் கொண்டு அமைந்த கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டுள்ளது. படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில், நடிகர் யாஷின் பிறந்த நாளை முன்னிட்டு, ஜனவரி 8 ஆம் தேதி காலை 10.25 மணிக்கு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர்.
இப்படத்தில் யாஷ் உடன் நடிக்கும் மற்ற பிரபலங்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என்று குறிப்பிடத்தக்கது.