2023ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான அதிரடியான ஆக்சன் திரைப்படம் ‘கில்’ பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யும் பணிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த ரீமேக் பணிகளை தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா மேற்கொண்டு வருகிறார். இவர் இந்தப் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் இயக்க இருக்கிறார்.

முந்தைய தகவல்களின்படி, தமிழ் பதிப்பில் கதாநாயகனாக நடிக்க துருவ் விக்ரமுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இப்போது அது உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், தமிழ் ரீமேக்கில் வில்லன் கதாபாத்திரத்தில் ‘உறியடி’ விஜயகுமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, தெலுங்கு பதிப்பில் கதாநாயகனாக பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.