ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ திரைப்படம் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் 2007 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று வெளியானது. இப்படத்தில் முதலில் சுமன் கதாபாத்திரத்தில் சத்யராஜை நடிக்க அழைத்திருந்தனர். ஆனால் அவர் அதை ஏற்காமல் விலகியதால், அப்போது இணையத்தில் “ரஜினியுடன் நடிக்க சத்யராஜ் மறுத்தார்” என்ற தகவல்கள் பரவின.

சமீபத்தில் அளித்த பேட்டியில் சத்யராஜ், உண்மையான காரணத்தை விளக்கியுள்ளார். ‘சிவாஜி’ படத்தில் நடிக்க அழைத்த அந்த நேரத்தில் என் மார்க்கெட் சரிந்து கொண்டிருந்தது. நாயகனாக எப்படியாவது நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற சூழலில் இருந்தேன். ஏதாவது ஒரு படம் ஹிட்டாகி என்னை மீண்டும் உயர்த்துமா என்ற எதிர்பார்ப்பில் இருந்தேன். அந்தச் சூழ்நிலையில் தான் ஷங்கர் சார் என்னை ‘சிவாஜி’க்காக அணுகினார்.
ஆனால் நான் அவரிடம் “சார், என் நிலைமை இப்போது மிகவும் மோசமாக இருக்கிறது. நாயகனாக எப்படியாவது நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது. இந்த நேரத்தில் நான் வில்லனாக நடித்தால், என் நிலைமையே முற்றிலும் பாதிக்கப்படும்” என்று சொன்னேன். இதுவே உண்மையான காரணம். ஆனால் இணையத்தில் பல்வேறு விதமாக தவறான தகவல்களை எழுதினர் என்று சத்யராஜ் தெரிவித்துள்ளார்.