Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பராசக்தி டைட்டில் யாருக்கு? தீயாய் எழுந்த விவாதம்… ஒற்றை புகைப்படத்தின் மூலம் தணித்த SK-ன் பராசக்தி பட தயாரிப்பாளர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.இதனையடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களிலும் நாயகியாக ஸ்ரீலீலா நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷுக்கு 100வது படமாகவும் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.இதையடுத்து, இப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயரிட்டுள்ளனர். நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’ பெயரை பயன்படுத்திக்கொள்ள ஏ.வி.எம்.நிறுவனம் அனுமதி வழங்கி வாழ்த்தி இருந்தது.

இந்த நிலையில், ‘பராசக்தி’ தலைப்பை கடந்தாண்டே பதிவு செய்துவிட்டதாக விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.அருண் பிரபு இயக்கும் படத்திற்கு தமிழில் ‘சக்தித் திருமகன்’ என்றும் தெலுங்கில் ‘பராஷக்தி’ எனவும் பெயரிடப்பட்டு பதிவு செய்துள்ளதாக கூறியுள்ள விஜய் ஆண்டனி, பதிவிற்கான ஆவணத்தையும் வெளியிட்டுள்ளார். பதிலுக்கு சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் அவர்கள் பராசக்தி டைட்டிலினை பதிவு செய்ததற்கான ஆவணத்தை பகிர்ந்துள்ளார்கள்.இதனால், சினிமா ரசிகர்களிடையே ‘பராசக்தி’ என்ற பெயர் தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பராசக்தி பட தயாரிப்பாளர் விஜய் ஆண்டனியுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இந்த பரபரப்பை தணித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News