ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இசையமைத்தவர் எஸ். எஸ். கீரவாணி.

தற்போது, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து, பாகுபலி தி எபிக் என்ற பெயரில், நீண்ட ரன்னிங் டைம் கொண்ட பதிப்பு மற்றும் முன்னதாக வெளியான இரண்டு பாகங்களிலும் இடம் பெறாத பல முக்கிய காட்சிகளைச் சேர்த்து, வரும் அக்டோபர் 31ஆம் தேதி பல மொழிகளில் வெளியிட உள்ளனர்.
இதற்கான டீசர் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக டோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது. சுவாரஸ்யமாக, இதே நாளில் வார்-2 மற்றும் கூலி திரைப்படங்களும் திரைக்கு வருகின்றன.