Touring Talkies
100% Cinema

Tuesday, June 17, 2025

Touring Talkies

‘கூலி’ படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும்? கசிந்த புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் ‘சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், ‘வேட்டையன்’ படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் ஷாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர் அமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே ஒரு சிறப்பு பாடலில் நடனமாடியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை, ஐதராபாத், ஜெய்ப்பூர், விசாகபட்டினம் உள்ளிட்ட நகரங்களில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் நடைபெற்றன. தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் நடைபெற்று வருகின்றன. தங்கக் கடத்தலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம், வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த வாரத்தில் ‘கூலி’ படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, டி. ராஜேந்தர் பாடிய ‘சிக்கிட்டு’ எனும் பாடல் முதலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News