தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘டிரெயின்’. இதில் ஜெயராம், நாசர், டிம்பிள் ஹயாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட் உள்ளிட்டவற்றின் பிஸ்னஸ் காரணமாக இப்படம் ரிலீஸூக்காக காத்திருக்கிறது.
இருப்பினும், இந்த படத்தை இம்மாதம் 28ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் கூறப்படுகிறது. இப்படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

