Touring Talkies
100% Cinema

Saturday, June 7, 2025

Touring Talkies

‘பென்ஸ்’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது? வெளியான புது அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பென்ஸ்’. இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’, ‘கைதி’, ‘லியோ’ ஆகிய படங்களின் தொடர்ச்சியாக, ‘பென்ஸ்’ திரைப்படமும் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் (LCU) பாகமாக உருவாகுவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மலையாள நடிகர் நிவின் பாலி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பதை படக்குழு வெளியிட்ட வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதே நேரத்தில், பென்ஸ் பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், ஒரு பேட்டியில் இப்படம் குறித்த புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். “பென்ஸ் படத்தில் மூன்று கதாநாயகிகள் இடம்பெறுகின்றனர். இதுவரை, படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் இது முடிவடைகிறது. அதன் பின்னர் அடுத்த கட்ட படப்பிடிப்பு மங்களூர், ராஜஸ்தான் போன்ற இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News