கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான மற்றும் நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘மெய்யழகன்’. அடுத்ததாக அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ராஜ்கிரண், சத்யராஜ், கிர்த்தி ஷெட்டி போன்ற பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டது, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று எக்ஸ் சமூக வலைதளத்தில் ஸ்பேசில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கலந்துகொண்டார்.
அவர் கூறியதாவது, “வா வாத்தியார் திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்,” என தெரிவித்தார்.