சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை மற்றும் இலங்கை உள்ளிட்ட இடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருந்தது.

இதற்கான காரணமாக, சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மதராஸி’ படத்தின் படப்பிடிப்பை முடிக்க சென்று விட்டதாக கூறப்பட்டது. அதன் பின்புலத்தில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் வந்ததால், இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தாமதமாகியதாகவும் தகவல்கள் வெளியாகின.
தற்போது அவர் அந்த வழக்கிலிருந்து விடுபட்டுள்ளதால், ‘பராசக்தி’ உள்ளிட்ட தனது மற்ற பட வேலைகளை விரைவில் தொடங்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.