லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகர்ஜுனா, உபேந்திரா, ஆமிர் கான் உள்ளிட்டோர் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கூலி திரைப்படம் முதல்நாளில் ரூ.151 கோடி வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், கூலிக்குப் போட்டியாக ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான வார்-2 திரைப்படம் முதல்நாளில் இந்தியா முழுவதும் ரூ.52.50 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
