Touring Talkies
100% Cinema

Tuesday, June 24, 2025

Touring Talkies

குபேரா படத்தின் முதல்நாள் வசூல் நிலவரம் என்ன?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ”குபேரா” திரைப்படம், இந்த ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.

நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் தனுஷின் நடிப்புக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பெரும்பாலான பாராட்டுகள் குவிந்துவருகின்றன. சிறந்த விமர்சனங்களை பெற்றுவரும் இந்த திரைப்படம், முதல் நாளில் ரூ.13 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது, தனுஷின் நடிப்பில் கடந்த காலத்தில் திரையரங்குகளில் வெளியான ”ராயன்” திரைப்படத்தின் வசூலுடன் ஒப்பிடும் போது குறைவாகும். ”ராயன்” படம் ரூ.15.7 கோடி முதல் நாள் வசூலை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், ”குபேரா” படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவரம் வெளியாகிய பிறகே இதைப்பற்றி உறுதி கூற இயலும்.

- Advertisement -

Read more

Local News