இயக்குனர் ஷங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில், “இந்த கேம் சேஞ்சர் படத்தை கிட்டத்தட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல எடுத்திருக்கிறேன். காரணம், இன்றைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்கும் விதத்தில் உடனுக்குடன் எதிர்பார்ப்பதையும், அடுத்தடுத்து எதிர்பார்ப்பதையும் கருத்தில் கொண்டு, அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் இந்த கேம் சேஞ்சரை உருவாக்கியுள்ளேன்” என்று கூறினார்.
ஆனால் தென்னிந்திய சினிமாவை கவனித்து வருவதுடன் நல்ல படங்களைப் பாராட்டும் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யபுக்கு, ஷங்கர் இப்படி “இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல படம் எடுத்திருக்கிறேன்” என்று கூறியதோ, பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் அவருக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அனுராக் காஷ்யப் தனது கருத்தை வெளியிடுகையில், “ஷங்கர் போன்ற ஜாம்பவான் இயக்குனர் இப்படியாக சொன்னது எனக்கு வருத்தம் அளிக்கிறது. அப்படி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல எடுத்திருக்கிறேன் என்றால், அது ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு இயக்குனர் தன்னை மாற்றிக் கொண்டதாக ஆகிவிடும். நல்ல உணவை வழங்குவதில் இரண்டு விதமான அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று, ஒரு கிரியேட்டராக இருந்து, சூப்பரான உணவை சமைத்துக் கொடுப்பது. மற்றொன்று, பரிமாறுபவராக இருந்து, அவர்கள் கேட்கும் உணவை பரிமாறுவது என்று தெரிவித்துள்ளார்.