நடிகர் கிஷோர் சமீபத்திய பேட்டியில், பாலிவுடில் நான் இரண்டு வலைத் தொடர்களில் நடித்திருந்தேன். அதற்குப் பிறகு முருகதாஸ் சார் இயக்கிய ‘சிகந்தர்’ படத்திலும் நடித்தேன். அந்த படத்திலும் முழுவதும் தமிழ் அணியேய்தான் வைத்திருந்தார்கள். இதைத் தவிர வேறெதிலும் சுவாரஸ்யமான நல்ல வாய்ப்புகள் வரவில்லை. சில வாய்ப்புகள் வந்ததுண்டு, ஆனால் அவை எனக்கு பொருந்தவில்லை.

‘சாவா’ படத்திலும் என்னை நடிக்க கேட்டார்கள். ஆனால் அது ஒரு பிரச்சாரப் படம் என்பதை நான் அறிவேன். அதனால் அதில் நடிக்கவில்லை. இப்போது சினிமாவையே மக்களைப் பிரிக்கவும், அரசியல் ஆதரவை பெறவும் பயன்படுத்திவருகிறார்கள். ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ மாதிரி அரசியல் நோக்கத்திற்காக எடுக்கப்படும் படங்களில் நடிப்பதற்கு என்னால் முடியாது, என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, ‘அரசன்’ படம் வெளியாகப் போகிறதே என்பதால் நான் அதைப் பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன். நிச்சயமாக அது ஒரு நல்ல படமாக இருக்கும். ‘வடசென்னை’ படத்திலேயே ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் வெற்றிமாறன் சார் அளித்துள்ள ஆழம் அற்புதம். அவர் அந்த படத்தில் சேர்க்காமல் வைத்திருக்கும் காட்சிகளை மட்டும் எடுத்தாலும் ஒரு தனி வெப் சீரிஸ் எடுத்துவிடலாம். வெற்றிமாறன் எப்போதும் எனக்கு கதைகள் சொல்லுவார். அவர் சொல்லாவிட்டாலும் கூட நான் அவருடைய படத்தில் நடிப்பேன். அவருடைய ஐடியாஸ் எப்போதும் மிக சுவாரஸ்யமாக இருக்கும். நிச்சயமாக நான் அவருடைய படத்தில் நடிப்பேன் என்றார்.

