Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘பராசக்தி’. இதில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் இதில் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பு என்ற சமூக பிரச்சினையை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இறுதியாக சென்னையில் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. பின்னணி வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.‌அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், படத்திலிருந்து வெளியாகியுள்ள பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. தற்போது ‘பராசக்தி’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் பேராதரவை பெற்றுள்ளது.

- Advertisement -

Read more

Local News