துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா, கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், சுமந்த் ஆகியோர் நடித்த ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவான பான் இந்திய திரைப்படம் “சீதா ராமம்” மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிப் படத்தின் இயக்குனர் ஹனு ராகவபுடி தற்போது தனது அடுத்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இன்ஸ்டாகிராம் பிரபலமான இமான்வி நடிக்கிறார். இது இவரது முதல் திரைப்படமாகும்.
இந்நிலையில், பிரபாஸுடன் இணைந்து உருவாகும் தனது படத்தைப் பற்றி இயக்குனர் ஹனு ராகவபுடி கூறியதாவது, “பிரபாஸுடன் நான் பணியாற்றும் இந்த படத்தின் காட்சிகளை ரசிகர்கள் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். இதுவரை அவர்கள் பார்த்திராத தனித்துவமான சினிமாவை உருவாக்கி வருகிறோம், இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்” என்றார்.