தமிழில் கைதி, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன், இறுகப்பற்று போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஸ்ரீ குறித்த செய்தி கேட்டு உதவி செய்ய முன் வந்திருக்கிறார். நடிகர் ஸ்ரீ குறித்த செய்தி வெளியான நிலையில், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது சமூகவலைதள பக்கத்தில், நடிகர் ஸ்ரீயை தொடர்புகொள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், நாங்கள் என பல தரப்பினரும் நீண்ட காலமாக முயல்கிறோம். இதனிடையே அவரை பற்றிய யூகங்கள் வருவது துரதிர்ஷ்டமானது. ஸ்ரீயை தொடர்புகொண்டு அவரை நல்ல நிலமைக்கு கொண்டு வருவதற்கு யாரேனும் எங்களுக்கு உதவி செய்தால் மிக்க மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
