Touring Talkies
100% Cinema

Friday, June 20, 2025

Touring Talkies

விஜய் சார் மிகவும் கூலான மனிதர்… ஜனநாயகன் படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்த நடிகை மமிதா பைஜூ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை மமிதா பைஜு, நடிகர் விஜயை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, விஜய்யுடன் நடந்த உரையாடல் மற்றும் அதற்கான அவரின் ரியாக்ஷனைப் பற்றியும் மமிதா பேசியுள்ளார் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘‘ஜனநாயகன்’’ படத்தில் மமிதா பைஜு, விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் கடைசி திரைப்படமாகும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, மமிதா பைஜு கூறுகையில், “விஜய் சார் ஒரு நேரக்கெட்டியானவர். எப்போதும் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வந்துவிடுவார். மிகுந்த அமைதியானவர். ‘‘ஜனநாயகன்’’ படப்பிடிப்பில் எதையுமே அவர் மிகவும் கூலாக கையாள்வார். நான் அவரிடம் பல விஷயங்களை பேசுவேன், அதற்கு அவர் ‘ம்ம்’, ‘ஹா’ என பதில் சொல்வார்,” என்று தெரிவித்தார்.

தற்போது மமிதா பைஜு, விஷ்ணு விஷாலுடன் ‘‘இரண்டு வானம்’’ திரைப்படத்தில், பிரதீப் ரங்கநாதனுடன் ‘‘டியூட்’’ படத்தில், மேலும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News