நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி காமெடி நடிகராக மட்டுமின்றி, கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். நெல்சன் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் அவரது நடிப்பு பெருமளவில் பாராட்டைப் பெற்றது. தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இத்துடன், வாமா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜோரா கைய தட்டுங்க’ என்ற படத்தில் யோகி பாபு நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ஜாகிர் அலி தயாரித்துள்ளார். இதில் ஹரிஸ் பேரடி, வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மாயாஜால வித்தைகளை நிகழ்த்தும் ஒரு கலைஞரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
‘ஜோரா கைய தட்டுங்க’ திரைப்படம் வரும் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியாகியுள்ளது.