தனியார் ஊடகத்திற்குப் பேட்டி அளித்த ஸ்மிருதி இரானியிடம் 14 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நாம் ஒரு பென்ச் மார்க்கை செட் செய்து சீராக அதில் நல்ல ரிசல்ட்டைக் கொடுக்கும் போது நமக்கு அதிக ஊதியம் கொடுக்கலாம்தானே? இங்கிருக்கும் ஒவ்வொரு ஆண், பெண் நடிகர்களை விடவும் நான் அதிக சம்பளம் வாங்குகிறேன் எனில், அதற்கு என்னுடைய கடின உழைப்புதான் காரணம்.
