பல் மருத்துவராக தனது வாழ்க்கையை தொடங்கிய சவுந்தர்யா சர்மா, தற்போது நடிகையாக வலம் வருகிறார். ‘பிக் பாஸ் 16’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிய பிறகு, தற்போது ‘ஹவுஸ்புல் 5’ எனும் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு படத்தின் மூலம் பாலிவுட்டில் தனது அறிமுகத்தை நிகழ்த்தியுள்ளார்.

இந்தப் படத்தில் ”லூசி” என்ற கதாபாத்திரத்தில் நடித்த சவுந்தர்யா சர்மா, அந்த வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாராட்டுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், சவுந்தர்யா சர்மா, நடிகர் அக்சய் குமார் வழங்கிய முக்கியமான அறிவுரையை ஊடகத்திடம் பகிர்ந்துள்ளார். அவரது கூற்றுப்படி, “தொடர்ந்து உழைப்பதை தவிர்க்கவே கூடாது. அது நிச்சயமாக பலனைத் தரும். பேசுவதைவிட கேட்பதில் சிறந்தவராக இருங்கள்” என அக்சய் குமார் கூறியதாக சவுந்தர்யா குறிப்பிட்டுள்ளார்.