“அமரன்” திரைப்படம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியானது. வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்ட இப்படம், திரையரங்கிலும், வசூலிலும் பெரிய வெற்றியைப் பெற்றது.
2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிக லாபம் ஈட்டிய படமாக “அமரன்” நினைவுகொள்ளப்படுகிறது. இது பிற மொழிகளிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றதுடன், ஓடிடி தளத்திலும் வெளியானதால் ரசிகர்கள் மனதை கவர்ந்தது.


சமீபத்தில், இந்த படத்தை பார்த்த நடிகை ஜான்வி கபூர் இப்படத்தைப் பற்றிய தனது பாராட்டுகளை பதிவு செய்தார். அவர் கூறியதாவது, “இந்த படத்தை தாமதமாக தான் பார்த்தேன். ஆனால், இது மிக ஆச்சர்யமான மற்றும் உருக்கமான ஒரு படம். 2024 ஆம் ஆண்டை முடிக்க இது ஒரு சிறந்த படமாக இருந்தது. மனதை தொட்டும் கனக்க செய்தும் இருக்கும் படத்தை பார்த்தேன்,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.