பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘தலைவன் தலைவி’. இது, விஜய் சேதுபதியின் 52-வது படமாகும். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன் மற்றும் யோகி பாபு முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி மற்றும் பாண்டிராஜ் இருவரும் இதுவரை இணைந்து பணியாற்றாத நிலையில், இந்த கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஒரு புரோட்டா கடை நடத்தும் நபராக நடித்துள்ளார்.இந்த படம் ஒரு குடும்பக் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
மேலும், இப்படத்தின் ‘பொட்டல முட்டாயே’ என்ற பாடலும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘தலைவன் தலைவி’ திரைப்படம் ஜூலை 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் டிரெய்லரை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.