Touring Talkies
100% Cinema

Tuesday, September 9, 2025

Touring Talkies

தனுஷின் குபேரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்-ஐ வெளியிட்ட படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள குபேரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் மும்பை தாராவியை மையமாகக் கொண்ட அரசியல் திரில்லர் கதையமைப்பில் உருவாகியுள்ளது. இதில் தெலுங்கு திரைப்பட நடிகரான நாகார்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராஷ்மிகா மற்றும் ஜிம் சரப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜூன் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு படத்தின் டீசரும், பாடல்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. படம் வெளியாகும் தேதி நெருங்குவதால் படக்குழு தற்போது தீவிரமாகப் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. குபேரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் இன்றைய தினம் டிரெய்லர் வெளியாக இருந்தாலும், அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்து காரணமாக, விழாவை ஒத்திவைத்து, ஒரு நாள் தாமதமாக நாளை டிரெய்லர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News