Touring Talkies
100% Cinema

Thursday, June 12, 2025

Touring Talkies

கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா ‘ படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ‘தி ரூட்’ மற்றும் ‘தி ஃபேஷன் ஸ்டூடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ‘சரஸ்வதி சபதம்’ படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இந்த படத்தின் கதையை எழுதி, இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டிலேயே நிறைவடைந்தது. இதன் டீசர் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதற்கு முன், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்த ‘ரகு தாத்தா’ படம் அதிக வரவேற்பை பெறவில்லை. இதனால், ‘ரிவால்வர் ரீட்டா’ பட வெற்றிக்காக அவர் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்.

இந்நிலையில், படக்குழு இந்த படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News