‘குபேரா’ படத்திற்குப் பிறகு தனுஷ் நடிக்க உள்ள அடுத்ததாக அமரன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அவரது 55வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கு முன்பாக ‘போர் தொழில்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கும் தனுஷின் 54வது படத்தில் தனஷ் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் சமீபகாலமாக வலம் வந்த நிலையில், இன்று #D54 படத்தின் (ஜூலை 10) பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கதாநாயகியாக மலையாள நடிகை மமிதா பைஜு நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்துக்குப் பிறகு தான் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தின் வேலைகள் தொடங்கும் என கூறப்படுகிறது. தனுஷின் அடுத்த திரைப்படமாக ‘இட்லி கடை’ அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. அவர் நடித்துள்ள ஹிந்திப் படம் ‘தேரே இஷ்க் மெயின்’ நவம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. கடந்த மாதம் வெளியான ‘குபேரா’ திரைப்படம் தமிழை விட தெலுங்கில் பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.