சுந்தர்.சி இயக்கத்தில், நடிகர் வடிவேலு நடித்த காமெடி திரைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. இதுவரை, சுந்தர்.சி – வடிவேலு கூட்டணியில் மூன்று படங்கள் வெளியாகியுள்ளன. ‘வின்னர்’ படத்தில் கைப்புள்ள, ‘தலைநகரம்’ படத்தில் நாய் சேகர், ‘நகரம் மறுபக்கம்’ படத்தில் ஸ்டைல் பாண்டி போன்ற கதாபாத்திரங்கள், இன்று வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை.

இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அதாவது, சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து, சுந்தர்.சி, கேத்ரின் தெரசா, வாணி போஜன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. மேலும், வடிவேலு இப்படத்தில் 5 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், அதில் ஒரு கதாபாத்திரம் லேடி கெட்டப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்நிலையில், ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.