Friday, January 24, 2025

பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் லீக்… அதிர்ச்சியில் படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பான் இந்தியா ஸ்டாரான பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம், ‘த ராஜா சாப்’. ரொமான்டிக் ஹாரர் காமெடி படமான இதை இயக்குனர் மாருதி இயக்குகிறார். தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார், சஞ்சய் தத் என பலர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தமன் இசை அமைக்கிறார்.இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சியில் மாளவிகா மோகனன் சமீபத்தில் நடித்துள்ளார்.

காய்கறி மார்க்கெட்டில் நடப்பது போன்ற அந்தக் காட்சியில் அவர் சிலரை மேலிருந்து குதித்துத் தாக்குவது போல படமாக்கப்பட்டது. அந்தப் படப்பிடிப்பு வீடியோ, சமூக வலைதளங்களில் திடீரென கசிந்துள்ளது. இதைக்கண்ட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News