இயக்குனர் தஹா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். இப்படத்தில் முரளி, வடிவேலு, ராதா, வினு சக்கரவர்த்தி, டெல்லி கணேஷ், பி.வாசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஒரு பேருந்தை வைத்து காமெடி, கலாட்டாவாக இந்தப்படம் 2002ல் வெளியாகி வெற்றி பெற்றது. இன்றும் அந்த பட காமெடி பேசப்படுகிறது.இந்நிலையில் ஆகஸ்ட் 8, நாளை மறுநாள் படம் ரீ ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
