எம்ஆர் பிக்சர்ஸ், ஏ.மகேந்திரன் தயாரிக்கும் படம் ‘லவ் இங்க்’ . இந்தப் படத்தில் ராஜ் ஐயப்பா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். மலையாள நடிகையான டெல்னா டேவிஸ், ‘விடியும் வரை பேசு’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர். அதன்பிறகு ’49ஓ’ படத்தில் நடித்தார். கடைசியாக 2017ம் ஆண்டில் வெளியான ‘குரங்கு பொம்மை’ படத்தில் நடித்தார்.சினிமா வாய்ப்புகள் குறையவே சின்னத்திரை பக்கம் சென்றவர் அன்பே வா, அபியும் நானும், கண்ணான கண்ணே தொடர்களில் நடித்தார். தற்போது இந்த படத்தின் மூலம் திரும்பி வருகிறார். இதில் நடிகர்கள் சுனில் ரெட்டி, யோகிபாபு கேபிஒய் புகழ் ராமர் மற்றும் ரவி மரியா ஆகியோரும் இணைந்துள்ளனர். மேகராஜ் தாஸ் இயக்குகிறார். அர்ஜுன் ஒளிப்பதிவு செய்கிறார், படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.
