தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் திகழ்பவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘கிங்ஸ்டன்’ என்ற படம் வெளியானது. கமல் பிரகாஷ் எழுதி இயக்கிய இப்படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பின்னர், ஜி.வி. பிரகாஷ் ‘இடிமுழக்கம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிக்கிறார். ஏகே பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ‘இம்மோர்டல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இயக்குநர் மாரியப்பன் சின்னா புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதில், “திறமையின் ஆற்றல் நிலையமான ஜி.வி. பிரகாஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். மறக்க முடியாத இசைத்துணுக்குகளும் குறிப்பிடத்தக்க நடிப்பும் காத்திருக்கின்றன. ‘இம்மோர்டல்’ படக்குழு சார்பாக வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.