சிவா கார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள திரைப்படம் “அமரன்”. இதனை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்டு. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று, அதாவது செப்டம்பர் 21 ஆம் தேதி, நடைபெற்ற படக்குழுவினர் அறிமுக விழாவில், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர், துப்பாக்கியின் கனம் எப்படி உள்ளது? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு சிவகார்த்திகேயன், துப்பாக்கி கனமா தான் இருக்கும், அத கரெக்ட்டா ஹேண்டில் பண்ணனும் என சூப்பராக பதிலளித்தார்.
அவரது இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. காரணம், அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான “கோட்” படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த காட்சியில், விஜய், சிவகார்த்திகேயனிடம் “துப்பாக்கிய புடிங்க சிவா எனக் கூறுவார். இந்த வசனங்கள் பல்வேறு விதங்களில் விவாதிக்கபட்டது குறிப்பிடத்தக்கது.