Wednesday, February 5, 2025

ஜிவி‌ மேஜிக்கல் இசையில் வெளியான தனுஷின் NEEK படத்தின் நான்காவது பாடல் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ, ராஜ்கிரண் இணைந்து நடித்த ‘பவர் பாண்டி’ திரைப்படத்தின் மூலம் தனுஷ இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, அவர் இயக்கி, நடித்த ‘ராயன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, தனுஷ இயக்கும் மூன்றாவது படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இப்படத்திற்காக இசையமைக்கிறார். இதை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படம் வரும் 21-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

ஏற்கனவே, இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியான நிலையில், நான்காவது பாடல் குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் ‘புள்ள’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News