Touring Talkies
100% Cinema

Thursday, August 7, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயனின் குரலில் வெளியான கோபி – சுதாகர் நடிக்கும் திரைப்படத்தின் முதல் பாடல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் பரிதாபங்கள் சேனல் கோபி – சுதாகர். யூடியூபில் வெற்றிகரமாக செயல்பட்டதைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களின் பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இரண்டாவது திரைப்படமான “ஓ காட் பியூட்டிபுல் (Oh God Beautiful)” குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.

இப்படத்தில் விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் புரோமோ வீடியோவை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலுக்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. “வேனும் மச்சா அமைதி” என்ற தலைப்பில் வெளியான இந்த சிங்கிள் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். இந்த ப்ரோமோ இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News