அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜான்வி கபூரின் ‘பரம் சுந்தரி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம், பஞ்சாப் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கும் தென்னிந்தியாவில் பிறந்த பெண்ணுக்கும் இடையே மலரும் காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படம் ஜூலை 25-ஆம் தேதி திரையிடப்பட இருக்கிறது.
தினேஷ் விஜன் தயாரிக்கும் மோடாக் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை உருவாக்கியுள்ளது. இதில் ஜான்வி கபூர் ‘சுந்தரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே ‘தேவரா’ படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்திருந்த ஜான்வி கபூர், இப்போது மீண்டும் தென்னிந்திய பெண்மணி என்ற தோற்றத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.