Touring Talkies
100% Cinema

Wednesday, May 28, 2025

Touring Talkies

தக் லைஃப் படத்தின் கதாபாத்திரங்களை கதாபாத்திரங்களாக தான் பார்க்க வேண்டும் – இயக்குனர் மணிரத்னம் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘தக் லைப்’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகிய பின்னர் சில சர்ச்சைகளை உருவாக்கியது. குறிப்பாக, வயதான தோற்றத்தில் காணப்படும் கமல்ஹாசன், இளமையான திரிஷாவுடன் நெருக்கமாக தோன்றும் காட்சிகள் மற்றும் அபிராமி என்பவருக்கு கமல்ஹாசன் முத்தம் கொடுக்கும் காட்சிகள் அந்த சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்தன. இதனுடன் திரிஷா நடனமாடிய ‘சுகர் பேபி’ பாடலும் வெளியாகி, இந்தக் கதையின் உள்ளடக்கத்தை ஒரு அளவிற்கு ரசிகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்தது.

இதனிடையே, சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் இயக்குனர் மணிரத்னம் கூறுகையில், “சமூகத்தில் நிகழும் சில விஷயங்களை மக்கள் தவிர்க்க முயற்சிக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் வயதில் பெரியவர்கள், தங்களைவிட இளமையான ஆண்கள் அல்லது பெண்களுடன் உறவு வைத்திருப்பது ஏற்படும். இது வாழ்க்கையின் ஒரு யதார்த்தமான உண்மை. இது நீண்ட காலமாக உள்ளது, இப்போதும் தொடர்கிறது. ஆனால் இதையே ஒரு திரைப்படத்தில் காணும் போது, அதனைப் பிழையாகவே பார்க்கின்றோம், அல்லது ஒரு குறிப்பிட்ட முறையில்தான் அது இருக்க வேண்டும் என வற்புறுத்துகிறோம். இப்படியான உறவுகளை திரைப்படங்களில் பார்க்கும் போது, அவற்றை வேறுபட்ட முறையில் மதிப்பீடு செய்யக்கூடாது. கமல் மற்றும் திரிஷாவை அந்தக் கதாபாத்திரங்களாக மட்டுமே நாம் காண வேண்டும், அவர்களை கமல், திரிஷா என நிஜ வாழ்க்கையோடு தொடர்புபடுத்தக் கூடாது என்றார்.

இயக்குனரும் நடிகர்களும் ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பு பல விளக்கங்களை அளிக்கலாம். ஆனால், திரைப்படம் வெளியாகிய பின், அதை மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள், எவ்வாறு உணர்கிறார்கள் என்பதே முக்கியமானது.

- Advertisement -

Read more

Local News